» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய விளையாட்டு மைதானத்தை 10 நாட்களில் இலவசமாக பயன்படுத்தலாம்: மேயர் தகவல்
புதன் 21, மே 2025 3:32:33 PM (IST)

தூத்துக்குடியில் அமைக்கப்படும் புதிய விளையாட்டு மைதானத்தை 10 நாட்களில் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். இணை ஆணையர் சரவணக்குமாா், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினாா்.
முகாமை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் "குறைதீர்க்கும் முகாம் கடந்த 11 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இங்கு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
கிழக்கு மண்டலம் மாநகராட்சியின் பழைய பகுதி நூறு வருடத்திற்கு முன்பு உள்ள பகுதி இதுதான் வார்டு 23. முதல் 28 வரை பழைய நகராட்சியின் வார்டுகள் சின்ன சந்துகள் 4 அடி 5 அடி உள்ள சாலைகள் எல்லாம் பேவா்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. 1500 புதியதாக லைட்டுகள் வரப்படுகிறது. பீச் ரோடு முத்து நகர் கடற்கரையில் சனி ஞாயிறு 2000 பேர் வருகை தருகிறார்கள். தற்போது கோடை கால விடுமுறை என்பதால் தினசரி 2000 பேர் வருகிறார்கள். அங்கு ஓய்வு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
ரோச் பூங்கா நல்ல முறையில் மீண்டும் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு வருங்காலங்களில் பல்வேறு வசதிகளுடன் அங்கு அமைக்கப்பட உள்ளது. பீச் ரோட்டில் ஒரு புறம் தான் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது தற்போது அதன் எதிர் புறத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
விவிடி சிக்னல் முதல் பழைய துறைமுகம் வரை ரோட்டின் இருபுறமும் அழகுப்படுத்தும் வகையில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதுபோல சிஎஸ்ஐ சர்ச் எதிரே உள்ள பூங்கா முதியோர்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வசதியாக அங்கே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வஉசி கல்லூரி அருகில் புதியதாக விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவசமாக பயன்படுத்த இன்னும் பத்து நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சண்முகபுரம் பகுதியில் நீலநிற பைப் லைன் பதிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாள் கோரிக்கையான தெப்பக்குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் குழந்தைகள் கண்டு களிக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. தெப்பக்குளத்தில் போட் வசதியும் மக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகா்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ெநடுமாறன். இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் தனலட்சுமி, ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், மகேஸ்வாி, ரெக்ஸ்லின், மாியகீதா, மும்தாஜ், ாிக்டா, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா் ஆர்தா்மச்சாது, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
வாழ்த்துகள்மே 21, 2025 - 06:56:27 PM | Posted IP 162.1*****
தெப்பகுளத்தில் போட் வசதி தேவையில்ல.. அது கோயிலுக்கு உரியது
Pratheepமே 21, 2025 - 04:44:41 PM | Posted IP 172.7*****
முத்து நகர் பீச் சிறுவர்கள் விளையாடும் ஸ்கேட்டிங் மைதானத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரியாக எரிவதற்கு அங்குள்ள செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கறேன்
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











MANIமே 22, 2025 - 06:10:38 PM | Posted IP 162.1*****