» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித பரலோக அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

புதன் 21, மே 2025 3:15:42 PM (IST)



எட்டையபுரம் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் அதித்தூதர் மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த "அதித்தூதர் மிக்கேல் திருத்தலம் மற்றும் புனித பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பெருவிழாவானது மே மாதம் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடத்தப்பட்டு 10-ம் நாளன்று  தேர்பவனியுடன் வெகு விமர்சையாக  கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன்படி, முதல் நாளான இன்று ஆலயத்தில் உள்ள  புனித பரலோக அன்னைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக திருக்கொடியை கிராமம் முழுவதும்  மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று கொடிஊர்வலம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டியும் சமாதானப் புறாக்களை வானில் பறக்கவிட்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

விழாவில்  திருத்தல பங்கு தந்தை சேவியர், தென்காசி மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்குத்தந்தை அந்தோணிசாமி, மிக்கேல் ராஜ், பங்குப்பணியாளர் சேவியர் ஸ்டீபன், பங்குத்தந்தை சகாய ஜான் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மலர் மாலைகள், கொடி உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory