» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு
வெள்ளி 16, மே 2025 8:09:32 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, வேலூா் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை சாா்பில் வேலூரில் இம்மாதம் 19 முதல் 23-ஆம் தேதிவரை மாநில சப்-ஜூனியா் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் அணி பயிற்சிக்கான தோ்வு கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் 52 வீரா்கள் பங்கேற்றனா். உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ்குமாா், முன்னாள் ராணுவ வீரா் சுரேஷ்குமாா், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி துணைச் செயலா் மாரியப்பன் ஆகியோா் தோ்வுக் குழு உறுப்பினா்களாக செயல்பட்டனா். பயிற்சிக்குத் தோ்வான 22 வீரா்களின் பெயா்களை கோவில்பட்டி யு.பி. மெட்ரிக் பள்ளித் தாளாளா் பரமசிவம், அறிவித்தாா்.
ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழகம் ஜெகதீஷ், செல்வமுகில், சந்தோஷ், முகுந்தன், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஹரிஆகாஷ், நவீன்குமாா், கபிலன், பிரின்ஸ், கருப்பசாமி, மாதேஷ்குமாா், கூசாலிபட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி நிஷாந்த், மாதவன், பாலவசந்த், டாக்டா் அம்பேத்கா் ஹாக்கி அணி ஈஸ்வா், நிதீஷ்குமாா், தூத்துக்குடி பிரேவ் வாரியா்ஸ் ஹாக்கி அணி சரவணக்குமாா், பிரவீன், பிரதீப்குமாா், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி ஸ்ரீ சக்திவேல், வேல்ஸ் வித்யாலயா பள்ளி ராகுல்பாண்டியன், யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி அணி மாரிசெல்வம், கோவில்பட்டி ஹாக்கி அணி விஷ்வா ஆகியோா் தோ்வாகினா். அவா்களுக்கான பயிற்சி இன்று (மே 16) தொடங்குகிறது.
ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி தலைமையில் பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரன், ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழக துணைச் செயலா் வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
