» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்

வியாழன் 15, மே 2025 7:54:13 PM (IST)



தூத்துக்குடியில்  கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு அமைச்சர்  கீதாஜீவன்  சான்றிதழ்கள் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற SDAT கட்டணமில்லா கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன்  சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

உடன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர்  அதிர்ஷ்டராஜ், மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர்  பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி  அனல் சக்திவேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்  ராபின், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்  சின்னதுரை, விளையாட்டு பயிற்சியாளர்கள்  ஜான் கென்னடி,  பழனிச்சாமி,  லூர்து, நிகழ்ச்சி தொகுப்பாளர்  பெனிட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சண்முகம்மே 15, 2025 - 09:24:17 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற ,பேரூராட்சி , நகர , மாநகர உள் சாலைகளில் மழைநீரை சேமிக்க புதிதாக கட்டமைக்கப்படும் ZIGZAG PAVER CONCRETE ROAD CONSTRUCTION பல இடங்களில் சாலை மட்டம் உயரம் ஏறாமல் இருக்க பழைய கான்கீரீட் சாலை தார் சாலைகளை உடைத்து நீர் பூமியில் செல்ல பாறை வரை துளைகள் BORING DRILL போட்டு சல்லிக்கல் நிரப்பாமல் பழைய சாலைகளை உடைக்காமல் துளையிடாமல் சாலை மீது சல்லிக்க்கல் தள்ளிட்டு சாலைகள் உயரம் ஏறுமாறு கட்டமைப்பதால் மழைபொழிவிற்கு பின் நிலத்தடி நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்து கட்டமைப்பு உறுதிசெய்து TWAD வலைதள அன்றாட ஆன்லைன் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு பதிவு உறுதிக்கு பிறகே கட்டுமான பில் தொகை 50% மேல் அளிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory