» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!

வியாழன் 15, மே 2025 4:52:09 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் பாஸ்போர்ட் பதிவு மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை/ திருநெல்வேலி-யில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்த சான்றிதழ் சரி பார்ப்பு பணி தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலும் செய்யப்படுகிறது. 

மேலும் தற்போது தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் CSC என்ற சேவை மூலம், புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றிக்கு online லில் விண்ணப்பித்து appoinment பெற்று தரப்படும். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். (Passport fee- Rs. 1500/- சேவைக்கட்டணம் Rs.100/-) விண்ணப்பித்த பின் எந்த தேதியில் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விபரம் தெரிவிக்கப்படும்.

அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக பொது மக்கள் அனைவரும் பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக பாஸ்போர்ட் பதிவு மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தினை உபயோகித்து பயனடையுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு), வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

Antoமே 16, 2025 - 08:01:12 PM | Posted IP 104.2*****

Postel id card apply panni 4 month achi innum varala ithula passport vera?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory