» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம் : ஆட்சியர் தகவல்

வியாழன் 15, மே 2025 4:30:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்
க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம்,வேலைவாய்ப்பு , சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக "தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்" அமைக்கப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையானது பின்வரும் அட்டவணையின்படி வட்டார வாரியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைப்பெற உள்ளது. எனவே, இச்சிறப்பு முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச்சான்றிதழ், போட்டோ, கைப்பேசி எண் விபரங்களுடன்

வட்டாரம் - முகாம் நடைபெறும் இடம் தேதி மற்றும் நேரம் முற்பகல்: 11.00

1. தூத்துக்குடி: ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் 19.05.2025

2. கோவில்பட்டி: வட்டார வளர்ச்சி அலுவலகம் 20.05.2025

3. உடன்குடி: வட்டார வளர்ச்சி அலுவலகம் 21.05.2025

4. கயத்தார்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 22.05.2025

5. ஆழ்வார் திருநகரி: வட்டார வளர்ச்சி அலுவலகம் 23.05.2025

6. திருச்செந்தூர்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 26.05.2025

7. விளாத்திகுளம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 27.05.2025

8. சாத்தான்குளம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 28.05.2025

9. ஸ்ரீவைகுண்டம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 29.05.2025

10. ஓட்டப்பிடாரம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 30.05.2025

11. புதூர்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 02.06.2025

12. கருங்குளம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் 03.06.2025


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory