» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் : கிராம மக்கள் 365 ஆவது நாள் போராட்டம்!

வியாழன் 15, மே 2025 4:16:55 PM (IST)



பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 365வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி பகுதியில் இயங்கி வரும் மூன்று கழிவு மீன் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வீடுகளில் குடியிருக்க முடியவில்லை.நச்சுப் புகை காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன ஏற்படுவதால் அந்த நிறுவனங்களை மூடக்கோரி பொட்டலூரணி ஊர் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில, தொடர் போராட்டம் தொடங்கிய 365 ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் போராட்டக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில், கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னாள் துணை ஆட்சியர் சங்கரலிங்கம், தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர் மணிமாறன், தமிழர் நீதிக்கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் அழகுராசன், மக்களதிகாரம் மண்டலப் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். செல்வி தமிழ் ஒளி எழுச்சிப் பாடல் பாடினார். 

தமிழர் கழகத் தலைவர் தமிழ் முகிலன், டங்க்ஸ்டன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நாம் தமிழர் கட்சித் தொகுதிப் பொறுப்பாளர் வைகுண்ட மாரி, மக்களதிகாரத்தைச் சேர்ந்த விஜி, செல்வம், சமூக ஆர்வளர் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளான பொது மக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் போராட்ட முன்னணியாளர் மாரியப்பன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory