» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மார்ச் 31 வரை ரூ.263.50 கோடிக்கு பயிர் கடன்கள் வழங்கல் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

வியாழன் 15, மே 2025 4:05:05 PM (IST)



தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மார்ச் 31 வரை ரூ.263.50 கோடிக்கு விவசாயபயிர்  கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 181.16 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. 

பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 71.528 கனஅடியாகஉள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 300 கன அடியாக உள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 0.47 மெ.டன், உளுந்து 79.079 மெ.டன்,கம்பு 4.332 மெ.டன்,நிலக்கடலை 1.576 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4068 மெ.டன் யூரியா, 2632 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1402 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 624 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் மற்றும் SSP 498 மெ.டன் இருப்பில் உள்ளன. நடப்பு மே, 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 800 மெ.டன் யூரியா, 1290 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 350 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 425 மெ.டன் யூரியா 125 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 450 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கிடங்கு மற்றும் குளிர்பதனகிடங்குகள் மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் திருவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம் ஆகியவற்றினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்திய கால கடன்கள் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 31.03.2025 வரை ரூ.263.50 கோடிக்கு 22463 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16485 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.194.77 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 01.04.2025 முதல் 13.05.2025 வரை ரூ.5.99 கோடிக்கு 324 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 238 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.4.42 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory