» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில்  மொத்தம் 16014 பயனாளிகளுக்கு ரூ.47கோடியே 94லட்சத்து 19ஆயிரத்து 561 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில், அதாவது, தூத்துக்குடி வட்டத்தில் 244 பயனாளிகளுக்கு ரூ.75,80,350  மதிப்பிலும், திருச்செந்தூர் வட்டத்தில் 1434 பயனாளிகளுக்கு ரூ.7,77,07,739  மதிப்பிலும், திருவைகுண்டம் வட்டத்தில் 130 பயனாளிகளுக்கு ரூ.40,33,600  மதிப்பிலும், சாத்தான்குளம் வட்டத்தில் 105 பயனாளிகளுக்கு ரூ.5,11,89,696  மதிப்பிலும், ஏரல் வட்டத்தில் 193 பயனாளிகளுக்கு ரூ.88,03,260  மதிப்பிலும், 

விளாத்திகுளம் வட்டத்தில் 8492 பயனாளிகளுக்கு ரூ.15,36,48,009  மதிப்பிலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 1411 பயனாளிகளுக்கு ரூ.5,81,332  மதிப்பிலும், கோவில்பட்டி வட்டத்தில் 1712 பயனாளிகளுக்கு ரூ.11,60,25,619  மதிப்பிலும், எட்டயபுரம் வட்டத்தில் 443 பயனாளிகளுக்கு ரூ.1,91,37,60  மதிப்பிலும், கயத்தார் வட்டத்தில் 1850 பயனாளிகளுக்கு ரூ.5,98,49,956  மதிப்பிலும் என மொத்தம் 10 வட்டத்தில் 16014 பயனாளிகளுக்கு ரூ.47,94,19,561 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory