» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம் :உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:52:04 AM (IST)
நெல்லை, தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள அறிவிக்கையில் "நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டு நீதிபதியாக இருந்த வி.பத்மநாபன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், நெல்லை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதியாக இருந்த பன்னீர் செல்வம் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிபதி மற்றும் பணியாளர் இழப்பீடு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற (மகிளா நீதிமன்ற) நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதியாக, தூத்துக்குடி குடும்பநல நீதிமன்ற நீதிபதி வி.சுரேஷ் ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதியாக பணியிட மாறுதல் ெசய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இவர்கள் உள்பட மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள், பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










