» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:11:14 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பிரதான சாலைகளில் குடிநீர் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பைப் லைன் போடப்பட்டதிலேருந்தே ஆங்காங்கே அவ்வப்போது பிரஷர் தாங்க முடியாமல் குடிநீர் குழாய் உடைந்து சேதமாகி சாலைகளில் தேங்கி வருகிறது. தூத்துக்குடி டூவிபுரம் மெயின் ரோட்டில் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 6 மாத காலமாக குடிநீர் வீணாகி வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பிரதான சாலையான தென்பாகம் காவல் நிலையம் எதிரே கடந்த 6 மாத காலமாக உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அங்கு போடப்பட்டுள்ள புதிய சாலையும் சேதமடைந்து விட்டது.

இதுபோல் டபிள்யூஜிசி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அவ்வழியே வாகனத்தில் மற்றும் நடந்து செல்பவர்கள் விழுந்து விபத்து ஏற்ப்படுகிறது. மேலும், தேங்கிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு உள்ளே புகுந்து விடுகிறது. எனவே தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் வீணவாதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
அதுApr 28, 2025 - 11:13:47 AM | Posted IP 162.1*****
மாநகராட்சிக்கு மூளை இல்லை , எல்லாம் துட்டு துட்டு துட்டு துட்டு துட்டு துட்டு மட்டும் தான் தெரியும்
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











சிலApr 28, 2025 - 11:14:52 AM | Posted IP 172.7*****