» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

வியாழன் 24, ஏப்ரல் 2025 8:50:36 PM (IST)



சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு விலக்கில் கெபி உள்ளது. இங்குள்ள டீ கடை அருகே நேற்று இரவு 7 மணி அளவில் ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதையடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆமையை பார்வையிட்டனர். இதில் அந்த ஆமை, நட்சத்திர வகை ஆமை என்பது தெரியவந்தது. 

இந்த  ஆமை புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுமாம். இந்த இனம் கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானது. கடற்கரை பகுதியில் காணப்படும் இந்த வகை ஆமை, இங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சாத்தான்குளம்- திருச்செந்தூர் சாலையில் ஆமை, சிக்கியதால் வாகனங்களில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? அல்லது வேறு யாரும் கொண்டு வந்தார்களா? என்பது தெரியவில்லை. 

இதுகுறித்து பொதுமக்கள், அதே பகுதி சோதனை சாவடியில் நின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், போலீசார் சின்னத்துரை, குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் இருந்து வனவர் ஜெயசேகர் இன்று காலை சம்பவ இடம் வந்து நட்சத்திர ஆமையைமீட்டு கடல் பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை மேற்கெண்டனர். அப்போதுசிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், போலீசார் சின்னத்துரை குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory