» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 5:26:02 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், "வரும் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். அதற்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்த நமது கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள பொதுக் கூட்டத்திடலில் மே-21 அல்லது மே-22 ஆகிய இரு தினங்களில் 3 கால நேரங்களில் ஏதாவது ஒரு நாள் - நேரத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவரங்களை கேட்டறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
தூத்துக்குடியான்Apr 23, 2025 - 12:09:01 PM | Posted IP 104.2*****
பாத்திமா மேடம் தலைமை ஏற்பார்களா? அன்றைய கூட்டத்தில் இறந்தோருக்காக பிரார்த்தனை பண்ணவேண்டும் ₹
செ.கைத்தான் கோமஸ்Apr 23, 2025 - 08:41:31 AM | Posted IP 104.2*****
சிறப்பு
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ராஜாApr 23, 2025 - 12:53:38 PM | Posted IP 172.7*****