» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன், அரசியல் கட்சியினர் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூத்துக்குடியில் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் காமராஜ் காய்கனி மார்க்கெட் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மும்தாஜ், கலை இலக்கிய அணி மாநகரச் செயலாளர் ஜீவன் ஜேக்கப், உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன், நாடார் மகிமை தலைவர் கேபி சீனிவாசன், தட்சணமாற நாடார் சங்க இயக்குநர் லிங்க செல்வன், முன்னாள் இயக்குநர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ் வார்டு தலைவர்கள் முருகேசன், பிரேம்நாத், சேவியர் மிஷ்யர்,வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், ஜான் வெஸ்லி,வாசி ராஜன், மாரியப்பன், ஜோக்கின்ஸ், ஐஎன்டியூசி முத்து, ரமேஷ், சாரதி, கிரிதரன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனதா தளம்
தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் கோமதிநாயகம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேந்திர பூபதி, மாநகர துணை செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி

இந்து முன்னணி சார்பில் வஉசி மார்க்கெட் எதிரில் சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநகர மாவட்ட துணைதலைவர் ஆதிநாத ஆழ்வார், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கிலட்சுமி,மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் ஆறுமுகம்,முருகேஷ் கண்ணன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










