» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 1,300 ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் சுமாா் 1,350 ஒப்பந்த ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்குவதைப்போல ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடா்பான நெய்வேலி என்எல்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் 1,300 போ் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினா்.
இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின்நிலைய செயலா் அப்பாதுரை, தொழிலாளா் முன்னேற்ற சங்க அமைப்புச் செயலா் அன்பழகன், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா் சங்கம் தொமுச செயலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டம் காரணமாக அனல் மின்நிலைய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இப் பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., மதன் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 8:37:27 PM (IST)

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)









