» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி பலி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 9:05:36 AM (IST)
கழுகுமலை அருகே உழவுப்பணிக்கு சென்றபோது டிராக்டர் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பரெட்டியார் மகன் நாகராஜ் (53). விவசாயி. இவருக்கு ஊருக்கு அருகில் தோட்டம் உள்ளது. இந்தநிலையில், இவர் நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து தோட்டத்தில் உழவுப்பணிக்கு டிராக்டரில் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள ஓடைக்கரையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சில அடிதூரம் ஓடியுள்ளது. அப்போது அருகே உள்ள 10 அடி ஆழமுள்ள ஓடைப்பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த அவரது உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன நாகராஜூவுக்கு முத்துமாரி (45) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். டிராக்டர் ஓடைப்பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










