» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது
வெள்ளி 18, ஏப்ரல் 2025 9:03:48 AM (IST)
கோவில்பட்டியில் கத்தியை காட்டி மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (32). கூலி தொழிலாளி. இவர், சம்பவத்தன்று கோவில்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு கடை முன்பு தனது உறவினருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த 2 வாலிபர்கள் மீண்டும் மது குடிக்க மாரிமுத்துவிடம் பணம் கேட்டுள்ளனர்.
அவர் பணம் இல்லை என்று கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மாரிமுத்துவை அவதூறாக பேசி, மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, மது குடிக்க பணம் கொடுக்காவிட்டால் கொலைசெய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி, அவர்களை கண்டித்துள்ளனர். இதை தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்தவாறு அங்கிருந்து அந்த 2வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டார்களாம்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்தவர்கள், மறவர் காலனியை சேர்ந்த வெள்ளைப்பாண்டி மகன் உத்தண்ட ராமன் (35), சிந்தாமணி நகர் 1-வது தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (28) என தெரிய வந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










