» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி தடுப்பணையில் மூழ்கி ஒருவர் பலி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 9:00:51 AM (IST)
ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் அருகே உள்ள கீழமங்கலகுறிச்சி மறவர் தெருவை சேர்ந்தவர் தினகரன் (53). இவர் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளி. இவருக்கு ஆறுமுகசெல்வி என்ற மனைவியும், முத்துமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வடகால் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவது வாடிக்கையாம்.
தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து அருகில் உள்ள மங்கலக்குறிச்சி தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர், உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்பொது ஆற்று தடுப்பணை அருகே அவரது செருப்பு மற்றும் உடைகள் இருந்துள்ளது.
இதை தொடர்ந்து பதறிப்போன உறவினர்களும், பொதுமக்கள் சிலரும் தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீருக்கு அடியில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தர்.. இது குறித்த தகவலின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










