» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அறிவிப்போடு முடங்கிய உப்பள தொழிலாளர்கள் நலவாரியம் : நடைமுறைபடுத்த கோரிக்கை!

வியாழன் 17, ஏப்ரல் 2025 10:57:48 AM (IST)



அறிவிப்போடு முடங்கி கிடக்கும் உப்பள தொழிலாளர்கள் நலவாரியத்தை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அடிக்கடி பெய்த கோடை மழையால் உப்புத் தொழில் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. 

பல உப்பளங்களில் இன்னும் உப்பு உற்பத்தியே தொடங்காத நிலையும் உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் சீராக கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்றும், உப்பளத் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட உப்பள தொழிலாளர் நலவாரியம் இதுவரை நடைமுறைக்கு வராமல் உள்ளது. அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, உப்புத் தொழிலை பருவம் சார்ந்த தொழிலாக பார்க்க வேண்டும். முன்பு 6 மாதம் நடந்த வேலை, தற்போது பருவ நிலை மாறுபாடு காரணமாக 4 மாதமாக சுருங்கி விட்டது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி மிகுந்த சிரமத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் பல தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் 13 ஆயிரத்து 500 பேர் மட்டுமே உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ளனர். இதில் 6 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதனால் மற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர. அனைத்து தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உப்பளத் தொழிலாளர்கள் நலவாரியம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இன்று வரை அந்த நலவாரியம் நடைமுறைக்கு வரவில்லை. அந்த நலவாரியத்தை பொருளாதார பங்களிப்புடன் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இந்த நலவாரியத்துக்கு உப்பு உற்பத்தி மற்றும் உப்பு ஏற்றுமதியில் ஒரு சதவீதம் லெவி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் வேலையின்றி பாதிக்கப்படும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு தனியாக ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory