» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் திருட்டு : பணிப் பெண் உள்பட 3 பேர் கைது
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:54:23 AM (IST)
காயல்பட்டினத்தில் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 தங்க நாணயங்களை திருடிய வழக்கில் பணிப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் யாகூப். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாஜிதா பர்வீன். இவர்களுக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் காயல்பட்டினம் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலைமாதம் சாஜிதா பர்வீன், வீட்டு லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்கள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டு வேலைக்கார பெண் அருணாசலபுரம் தீபிகா என்ற அல்பியா (35), அவரது சகோதரி இசக்கி தங்கம் (42), இசக்கி தங்கம் மகன் தமிழரசன் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










