» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் : பொதுமக்கள் அவதி
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:05:00 AM (IST)

தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6வது தெரு பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் பூபாலராயர்புரம் 6வது தெரு மத்தி பகுதியில் குடிநீர் விநியோக முறையில் ஏற்பட்டு வரும் குழப்பம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள மாயாஜாலம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குடி நீர் முறையில் வெளிவரும் தண்ணீர் முழுமையாக சாக்கடை நீராகவே வெளிவருகிறது.
கோடைகால தேவையில் குடி நீரின் அவசியத்தை மாநகராட்சி மறந்துவிட்டதால் இந்த அவலமும், அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த அவலத்தையும், அபாயத்தையும் உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து, பொதுமக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று பூபாலராயர்புரம் 6வது தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
இனிApr 17, 2025 - 07:04:16 PM | Posted IP 162.1*****
கொஞ்ச நாள்ல கால்வாய், பாதாள சாக்கடை, மலை நீர் சேகரிப்பு, எல்லாம் சேர்ந்து ஒன்னாகி செப்டிக் டேங்க் ஆறு ஓடும்.
இது தான்Apr 17, 2025 - 07:02:36 PM | Posted IP 172.7*****
உருப்படாத மாநகராட்சியின் சாக்கடை பயலுகளின் வேலை
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











BabuApr 18, 2025 - 01:35:38 PM | Posted IP 172.7*****