» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியதாக புகார் : முன்னாள் டிஎஸ்பி மே 5ஆம்தேதி ஆஜராக சம்மன்!
புதன் 16, ஏப்ரல் 2025 8:40:35 PM (IST)
சாத்தான்குளத்தில் புகார் கொடுத்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியதாக முன்னாள் டிஎஸ்பி ராஜி, மற்றும் தட்டார்மடம் முன்னாள் எஸ்ஐ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. டிஎஸ்பி மற்றும் எஸ்.ஐ ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் மே 5ஆம்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி வடக்கு ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செந்தில்வேல் மனைவி வசந்தா (45). இவரது நிலத்திற்கு செல்லும் பாதையில் அதே ஊர் சுயம்புலிங்கம் குடும்பத்தினர் நடுவக்குறிச்சி மின்வாரியம் சார்பாக மின் கம்பம் அமைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சுயம்புலிங்கம் குடும்பத்தினர் மற்றும் மின்வாரியத்திற்கு எதிராக சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 20.02.2022ஆம் ஆண்டு கம்பி வேலி, மற்றும் இரும்பு கேட் திருட்டு போனதாக தட்டார்மடம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அப்போதைய எஸ்ஐ பென்சன், அப்போதைய சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜி ஆகியோர் எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக புகார் தாரனான வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக மிரட்டி புகார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கை வாபஸ் வாள்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வசந்தா, அப்போதைய தட்டார்மடம் எஸ். ஐ பென்சன் மற்றும் அப்போதைய சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜி ஆகியோர் மீது நடவடிக்கை கோரி சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனி வழக்காக தாக்கல் செய்தார். இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தேவி ரெக்ஷா, எஸ்.ஐ பென்சன், டிஎஸ்பி ராஜி ஆகியோர் வரும் மே 5ஆம்தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்பிட தெரிவித்தார். அதன்படி எ¢ஸ்.ஐ பென்சன் மற்றும் டிஎஸ்பி ராஜி ஆகியோர் நீதிமன்ற விசாரணைககு ஆஜராக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










