» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - ஆட்சியர் இளம்பகவத் மரியாதை!

புதன் 16, ஏப்ரல் 2025 10:20:28 AM (IST)



கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப்போரட்ட வீரர் சுந்தரலிங்கம் 255-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது: சுதந்திரப்போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 1770-ம் ஆண்டு கவர்னகிரி கிராமத்தில் பிறந்தவர். சுதந்திர போராட்டத்தின்போது பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியவர். வாள் சண்டை, குத்துச்சண்டை, சிலம்பாட்டம், மல்யுத்தம், போன்றவற்றில் மிகவும் திறமையானவர். அவர் தனது கிராமத்தில் உள்ள குளத்தினை ஆக்கிரமிப்பதற்கு வந்தவர்களை வாள், சிலம்பு சண்டை மூலம் விரட்டியடித்தார். அவரது திறமை மற்றும் அறிவுத்திறனைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முதல் படைத்தளபதியாக வீரன் சுந்தரலிங்கம் அவர்களை நியமித்தார்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் அமைத்த ஆயுதக்கிடங்கில் வீரன் சுந்தரலிங்கம் ஆடு மேய்க்கும் தொழிலாளி போல் வேடமிட்டு, தனது மாமன் மகள் வடிவு என்பவருடன் சென்று ஆயுதக்கிடங்கில் குதித்து தீயிட்டு அழித்தார். இந்தியாவின் முதல் தற்கொலைப்படை போராளி வீரன் சுந்தரலிங்கம் தான். அன்னாரது தியாகத்தை போற்றும் விதமாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் வாரிசுதாரர் சூரியலட்சுமி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory