» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்பேத்கர் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:09:25 AM (IST)

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மாநகரசெயலாளர் முருக பூபதி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லசாமி, மாவட்ட அவைத்தலைவர் ராஜ், மாநகர தலைவர் பொம்மை, துணை தலைவர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், நிர்வாகிகள் காசிராஜ் சரவணன், இளைஞரணி சரவண பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர் சங்கம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷாம், ராஜ், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சூசைமுத்து தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல் முன்னிலையில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அருந்ததியர் முன்னேற்ற சங்கம்
தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சங்கரன், பொருளாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் கணபதி, துணைச் செயலாளர் நீலமேகம், அமைப்பு செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி தலைவி விஜயராணி, செயலாளர் சுகாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










