» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சனி 12, ஏப்ரல் 2025 10:06:17 AM (IST)

நான்கு சக்கர வாகனத்தின் பழுது நீக்குவதற்காக செலுத்தப்பட்ட தொகை மற்றும் சேவை குறைபாட்டிற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையைச் சார்ந்த தங்க இசக்கி பெருமாள் என்பவரது நான்கு சக்கர வாகனம் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்து விட்டது. உடனே அந்த வாகனத்தை தூத்துக்குடியிலுள்ள கார் விற்பனை நிறுவனத்திடம் பழுது பார்க்க அனுப்பியுள்ளார். அதோடு காப்பீடு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காப்பீடு நிறுவனம் பாதிக்கப்பட்ட காரை மதிப்பீடு செய்ய சர்வேயரை அனுப்பவில்லை. இதற்கிடையில் பழுது நீக்குவதற்கான தொகையை நுகர்வோர் செலுத்தி விட்டு காப்பீடு நிறுவனத்திடம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்க இசக்கி பெருமாள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தின் பழுது நீக்குவதற்காக ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் 2,45,082 மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 25,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory