» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விழிப்புணர்வு சைக்கிள் பவனி: ஆசிரியருக்கு கவிதை வாசித்து பாராட்டு!

புதன் 9, ஏப்ரல் 2025 4:18:30 PM (IST)



சுற்றுசூழல் பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது. 

உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்கிளில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் கவிதை வாழ்த்து பாராட்டு நண்பர்கள் குழுவினர்கள் மூலம் நடந்தது. 

அர்னால்டு ஜிம் நிர்வாகி பென்ட் தலைமை தாங்கி வாழ்த்தினார். முன்னால் பாண்டியன கிராம பேங்க் ஊழியர் பிரபஞ்ச பாலாஜி தான் எழுதிய 
கவிதையில் 

அரசியல்வாதிகள் அரசியல் கட்சி கொடி கட்டி
காரில் பறக்கும் கலிகாலத்தில்..
ஒலிம்பிக் விளையாட்டுவீரர்கள் 
படங்களை வெற்றி கொடியாக
தன் சைக்கிளில் அமைத்து 
கோவில்பட்டியை வலம் வரும்
திருமிகு வரதராஜன் அவர்கள்..
இவர் கோவில்பட்டி இந்து நாடார் மேனிலைப் பள்ளியில்.. பணிநிறைவு பெற்ற.. உடற்கல்வி ஆசிரியர்..
இளமைக்காலம் தொட்டு இன்று வரை.. சைக்கிளிலில் தான் சவாரி செய்கிறார்..
தமிழனின் ஆருயிர் தோழனான..சுகர்..
இரத்த அழுத்தம்..ஆஸ்மா.. 
மூட்டுவலி..போன்ற நோய்கள்..
இவரைக் கண்டு..அய்யோ அம்மா என தலை தெறிக்க  பாவம் ஓடுகிறது..
கோவில்பட்டி அர்னால்டு ஜிம்..பயிற்சி கூடத்தில்..
இப்போதும் உடற்கட்டமைப்பு பயிற்சி செய்கிறார்..
இறகு பந்து விளையாடுகிறார்..
வெட்டி பந்தாவில் அனைவரும்  மோட்டார் சைக்கிளில் சென்று ரிஸ்க் எடுக்கும்..
விழிப்புணர்வு சிறிதும் இல்லாத காலத்தில்..
உடற்பயிற்சி ஆசிரியர்  திருமிகு வரதராஜன் அவர்கள் சைக்கிள் ஓட்டும் நேயம்..
இன்றைய இளைய தலைமுறை.. நோயில்லாமல்..
செலவில்லாமல்.. நூறாண்டு வாழ..
நிச்சயம்  வழிகாட்டும்..என்றும் வாசித்து வாழ்தினார். 

தொடர்ந்து எஸ்பிஐ லைப் அட்வைசர பாலாஜி, வக்கீல் சுரேஷ் குமார், பொறியியல் வல்லுநர் ரஞ்சித் ராஜா, கோவில்பட்டி மைக்ரோகிரின் செயல்பாட்டாளர் சுரேஷ்குமார் உட்பட உடற்கட்டமைப்பு ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory