» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் ஜெகன் பொியசாமி
புதன் 9, ஏப்ரல் 2025 3:44:37 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைய பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்புரையாற்றினாா்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், "கடந்த 10 மாதங்களாக பெறப்பட்ட மனுக்களில் இந்த மண்டலத்தில் மட்டும் 580 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அதில் 548 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 32 மனுக்கள் மீது சிறு குறைபாடுகள் இருக்கிறது அதையும் சாிசெய்து தீர்த்து வைக்கப்படும். தற்போது சாலை வசதிகள் கேட்ட விண்ணப்பம் குறைவாகதான் வருகிறது. பாதாள சாக்கடை முறைப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. அதற்கு ஓத்துழைக்க வேண்டும் தோண்டப்பட்ட பகுதிகள் முறையாக சீரமைக்கப்படும்.
பொதுமக்கள் கஷ்டபடக்கூடாது என்பதற்காக கிராமபுறத்தையும் தாண்டி நகர்புறத்திலும் தமிழக முதலமைச்சர் இந்த முகாமை தொடங்கியுள்ளர். தூத்துக்குடியில் 5 ஆயிரம் சாலைகள் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டு காலமாக 3 ஆயிரம் சாலைகள் போடப்பட்டுள்ளன. எல்லா பள்ளி செல்லும் சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதியில் 2 ஆயிரம் சாலைகள் மே அல்லது ஜீன் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் பட்ஜெட்டில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் ஓரளவு சீர்செய்யப்பட்டுள்ளன. இருக்கிற சில பகுதிகளுக்குள் மணல் நிரப்பப்பட்டு சாி செய்யப்படும். மாநகராட்சி பகுதியில் மொத்தம் 206 பூங்காக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில தற்போது 60 பூங்காக்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த பகுதியில் பொிய பூங்கா என்று ராஜாஜி பூங்கா எம்.ஜி.ஆர் பூங்கா இருந்து வருகிறது. மற்ற இடங்களில் இட வசதிக்கேற்ப விளையாட்டு மைதானத்துடன் நடைபயிற்சி அமைய பெற்ற பூங்கா அமைக்கப்படும்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் கப்புகளை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம் 80 சதவீதம் அதை முறைப்படுத்திவிட்டோம் இன்னும் 20 சதவீதம் சிறுகுறு கடைகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அதையும் பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். கழிவு நீாில் கலந்து வந்து குறிப்பாக பக்கிள் ஓடை பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. அதே போல் பொதுமக்கள் தங்களது வீட்டில் தேவையற்ற கழிவு பொருட்களை தரம்பிாித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக கொடுக்க வேண்டும்.
பணியாளர்களுக்கும் சீரமம் இல்லாமல் இருக்கும். சுற்றுசூழலை கருத்தில் கொண்டு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 1942லிருந்து பள்ளி நிர்வாகத்தில் கட்டுபாட்டிலிருந்த பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானம் தற்போது மாநகராட்சி நிர்வாகத்தினாிடம் ஓப்படைத்துள்ளனா். சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்புறம் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. கிாிக்கெட் விளையாடுவதற்கு பலர் விருப்பம் தொிவித்துள்ளனா்.
முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பின்னா் படிப்படியாக மற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும். சண்முகபுரம், டூவிபுரம் உள்பட சில பகுதிகளில் புதிய கருப்புகலா் பைப் லைன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை முறைப்படுத்தி முடிந்தவுடன் எல்லாம் சாியாகிவிடும். எல்லோரும் சேர்ந்து உதவி செய்தால் தான் மாநகராட்சி வளர்ச்சியடையும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று பேசினாா்.
கூட்டத்தில் துணை ஆணையர் சரவணக்குமாா் உதவி ஆணையர் பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற் பொறியாளா்கள் இர்வின் ஜெபராஜ், காந்திமதி, உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் கனகராஜ், கண்ணன், விஜயலட்சுமி, கந்தசாமி, ராமர், பொன்னப்பன், இசக்கிராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், மந்திரகுமாா், வட்டப்பிரதிநிதி துரை, பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ், இளநிலை பொறியாளர் சேகா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ேஜஸ்பா், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










