» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 8:42:58 AM (IST)
தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டு மற்றும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மறவன்மடத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (27), கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (34), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (25) ஆகிய 3 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட ஜெபராஜ், சூரியராஜன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஜோசுவாராஜ்க்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










