» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாயமான சிறுவன் ரயில் நிலையத்தில் மீட்பு
புதன் 9, ஏப்ரல் 2025 8:37:02 AM (IST)
பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தூத்துக்குடி சிறுவனை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு ரயில்வே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 15 வயதுடைய ஒரு சிறுவன் அங்குமிங்குமாக சுற்றித்திரிந்தான். இதைப் பார்த்த போலீசார் உடனே சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.
அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி பஸ் மூலமாக நாகர்கோவில் வடசேரிக்கு வந்துள்ளான். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்து எந்த ரயிலில் ஏற வேண்டும் என்பது தெரியாமல் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது சிறுவன் கூறுகையில், "நான் வீட்டில் அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் கூறாமல் வந்துவிட்டேன்” என்றான். இதைத் தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டது குறித்து தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில் நிலையம் வந்த அதிகாரிகளிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுவன் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டான். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் நேற்று காலை நாகர்கோவில் வந்தனர். பின்னர் பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு சிறுவனை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










