» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா: 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் வழிபாடு.

புதன் 9, ஏப்ரல் 2025 8:03:36 AM (IST)



எட்டையபுரம் அருகே எத்திலப்பன் நாயக்கன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனி கொடைத் திருவிழாவை முன்னிட்டு சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட 108 பால்குடங்கள் மூலம் கோவிலில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் நன்கு அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 

மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் பால்குடம் எடுத்து வழிப்பட்டால், அனைத்து தீங்குகளும் நீங்கி, சுபகாரியங்கள் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்னர். மேலும், கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory