» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பார் அசோஷியேசன் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
திங்கள் 7, ஏப்ரல் 2025 10:16:54 AM (IST)
தூத்துக்குடியில் பார் அசோஷியேசன் தேர்தல் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள தூத்துக்குடி பார் அசோசியேசன் அமைப்பு உள்ளது. இதில், தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் மற்றும் 7 நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் 7 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன.
நடப்பு 2025-26ம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தகுதியான வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்யலாம். அன்று மாலை 4:30 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்: சில்லறை பிரச்சனைக்கு தீர்வு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:05:26 AM (IST)

மாடியிலிருந்து தவறி விழுந்து பரோட்டா மாஸ்டர் பலி
புதன் 16, ஏப்ரல் 2025 8:02:29 AM (IST)

தூத்துக்குடியில் சிறுபடகு மீனவர்கள் ஸ்ட்ரைக்!
புதன் 16, ஏப்ரல் 2025 7:58:26 AM (IST)

விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதன் 16, ஏப்ரல் 2025 7:54:01 AM (IST)

ஜல்லிக்கட்டு காளை திருட்டு: போலீஸ் விசாரணை
புதன் 16, ஏப்ரல் 2025 7:49:38 AM (IST)

அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதன் 16, ஏப்ரல் 2025 7:46:20 AM (IST)
