» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:29:01 AM (IST)
கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீசாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை வீரா் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து வீரப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சிக்கு கழுகுமலை காவல் நிலைய போலீசார் மாரியம்மாள், சேதுராஜன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிப்பிப்பாறை வடக்கு தெருவை சோ்ந்த சமுத்திரவேல் மகனான எல்லை பாதுகாப்பு படை காவலரான பாண்டியராஜ் (33), அவா்கள் இருவரையும் அவதூறாக பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தாராம். அப்பகுதி மக்கள் கண்டித்தவுடன் அவா் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து, காவலா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் அச்சியிடும் பயிற்சி : இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
சனி 12, ஏப்ரல் 2025 10:33:42 AM (IST)

தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!
சனி 12, ஏப்ரல் 2025 10:22:17 AM (IST)

சேவைக் குறைபாடு : இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,80,082 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 12, ஏப்ரல் 2025 10:06:17 AM (IST)

விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு : சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவு
சனி 12, ஏப்ரல் 2025 8:45:17 AM (IST)

வக் புவாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சனி 12, ஏப்ரல் 2025 8:37:48 AM (IST)

கோவில்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் திடீா் தீ விபத்து!
சனி 12, ஏப்ரல் 2025 8:18:08 AM (IST)
