» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3 கோஷ்டிகளாக தவெக ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 12:20:39 PM (IST)
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தூத்துக்குடியில் தவெக சார்பில் ஒரே இடத்தில் 3 கோஷ்டிகளாக தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்து தூத்துக்குடியில் மாவட்ட பொறுப்பாளர்கள் அஜிதா, சாம் முன்னாள் அரிமா சங்க ஆளுநர் முருகன் என மூன்று கோஷ்டியாக கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அரிமா சங்க ஆளுநர் முருகன் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள் அஜிதா மற்றும் சாம் ஆகியோர் தலைமையில் என மொத்தம் மூன்று கோஷ்டிகளாக ஒரே இடத்தில் சில மணி நேரம் இடைவெளி விட்டு விட்டு மூன்று கோஷ்டியும் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூத்துக்குடிக்கு மாவட்ட செயலாளர் நியமிக்க முடியாமல் தமிழக வெற்றி கழக தலைமை திணறி வருவதாகவும், கட்சி தொடங்கி ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே இத்தனை கோஷ்டியா? என்று அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
அதிApr 5, 2025 - 03:43:10 PM | Posted IP 104.2*****
யார் இந்த சாம் மற்றும் முருகன்? அஜிதா மட்டும்தானே செயல
பட்டு வருகிறார் ?
அதிApr 5, 2025 - 03:43:04 PM | Posted IP 172.7*****
யார் இந்த சாம் மற்றும் முருகன்? அஜிதா மட்டும்தானே செயல
பட்டு வருகிறார் ?
அதிApr 5, 2025 - 03:43:00 PM | Posted IP 104.2*****
யார் இந்த சாம் மற்றும் முருகன்? அஜிதா மட்டும்தானே செயல
பட்டு வருகிறார் ?
மேலும் தொடரும் செய்திகள்

டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
புதன் 9, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)

தூத்துக்குடியில் நிலதரகர் தூக்குபோட்டு தற்கொலை
புதன் 9, ஏப்ரல் 2025 10:42:43 AM (IST)

கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 10:31:02 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
புதன் 9, ஏப்ரல் 2025 10:13:23 AM (IST)

சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா மாவிளக்கு ஊர்வலம்
புதன் 9, ஏப்ரல் 2025 10:07:32 AM (IST)

பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது
புதன் 9, ஏப்ரல் 2025 8:45:08 AM (IST)

கோஷ்டி செயலாளர்Apr 8, 2025 - 03:39:53 PM | Posted IP 104.2*****