» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர் சரமாரியாக குத்தி கொலை : மகன் வெறிச்செயல்
சனி 5, ஏப்ரல் 2025 8:04:54 AM (IST)
தூத்துக்குடியில் தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை மகன் ராஜ் (56), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவரது 2வது மகன் ஜேம்ஸ் (33), திருமணம் ஆகி மனைவியுடன் அண்ணாநகர் 6வது தெருவில் குடியிருந்து வருகிறார்.
ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு பெற்றோரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார் இதனால் பெற்றோர் தனியாக 1ம் கேட் பகுதியில் வேறு முகவரியில் தனியாக குடியிருந்து வந்துள்ளனர், அங்கு சென்றும் மகன் தகராறு செய்ததால் அங்கிருந்து முகவரி மாற்றி கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகிழ்ச்சிபுரம் முகவரிக்கு வந்துள்ளனர்,
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சிபுரம் சென்ற மகன் ஜேம்ஸ், தனது தந்தை ராஜிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு டூவீலரில் வந்து கொண்டிருந்த தந்தை ராஜை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக கொலை வழக்கு பதிவு செய்து அவரது மகன் ஜேம்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:51:32 PM (IST)

குமரி அனந்தன் மறைவு: மத சார்பற்ற ஜனதா தளம் இரங்கல்
புதன் 9, ஏப்ரல் 2025 4:18:56 PM (IST)

விழிப்புணர்வு சைக்கிள் பவனி: ஆசிரியருக்கு கவிதை வாசித்து பாராட்டு!
புதன் 9, ஏப்ரல் 2025 4:18:30 PM (IST)

சூறாவளிக்காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
புதன் 9, ஏப்ரல் 2025 4:01:21 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் ஜெகன் பொியசாமி
புதன் 9, ஏப்ரல் 2025 3:44:37 PM (IST)
