» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:08:45 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகளையும், மொத்த வருவாய் மற்றும் லாபம் ஈட்டுவதிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 41.40 மில்லியன் டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு 0.77 சதவிகிதம் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது. 

சரக்கு கையாளுவதில் இறக்குமதியை பொறுத்தவரையில் 31.91 மில்லியன் டன்களையும், ஏற்றுமதியை பொறுத்தவரையில் 9.69 மில்லியன் டன்களையும் மற்றும் சரக்கு பரிமாற்றம் 0.12 மில்லியன் டன்களையும் கையாண்டுள்ளது.

சரக்குப்பெட்டகங்களின் செயல்பாடுகள்:

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்களை கையாளுவதில் 2024-25 நிதியாண்டில் 7.95 இலட்சம் டிஇயுக்களை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இச்சாதனையானது 2023-24 நிதியாண்டு கையாண்ட அளவான 7.47 இலட்சம் டிஇயுக்களை ஒப்பிடுகையில் 6.41 சதவிகிதம் அதிகமாகும்.

நிதிநிலை செயல்பாடுகள் (தோராயம்):

• 2024-25 நிதியாண்டில் மொத்த வருவாய் இதுவரை கண்டிராத அளவில் ரூபாய் 1209.19 கோடி, கடந்த நிதியாண்டு (ரூபாய் 1121.92 கோடி) ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 7.78 சதவிகிதம் ஆகும்.

• 2024-25 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 1021.66 கோடி, கடந்த நிதியாண்டு (ரூபாய் 984.78 கோடி) ஒப்பிடுகையில் 3.74 சதவிகிதம் வளர்ச்சி ஆகும்.

• 2024-25 நிதியாண்டில் வரிக்கு பின்பு நிகர உபரி வருவாய் ரூபாய் 534.90 கோடி, கடந்த நிதியாண்டு (ரூபாய் 460.08 கோடி) ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 16.26 சதவிகிதம் ஆகும்.

• இயக்க விகிதாச்சாரம் 29.05 மூ வளர்ச்சி அடைந்துள்ளது, இந்திய துறைமுகங்களில் தலைசிறந்த நிர்வாக திறனை சூட்டிக்காட்டுகிறது.

2024-25 நிதியாண்டில் சாதனைகள்:

• வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 23.02.2025 அன்று ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 30.10.2024 அன்று கையாண்ட அளவான 2,04,512 டன்களை விட அதிகமாக கையாண்டு சாதனைப் படைத்தது.

• 2024-25 நிதியாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 23.01.2025 அன்று ஒரே நாளில் 5250 டி.இ.யு சரக்குபெட்டகங்களை கையாண்டு சாதனை படைத்தது.
2024-25 நிதியாண்டு முடிவடைந்த திட்டப்பணிகள்

ரூபாய் 18 கோடி செலவில் 2 மெகாவாட் காற்றாலை நிறுவப்பட்டுள்ளது

ரூபாய் 1.46 கோடி செலவில் 400 கிலோவாட் மேற்கூரை சூரிய மின்னாலை நிறுவப்பட்டுள்ளது.

ரூபாய் 24.5 கோடி செலவில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயர் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கினை இணைக்கும் புதிய இணைப்பு கன்வேயர் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 4 நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் 20.51 சதவிகிதம் வருவாய் பகிர்வு முறைப்படி நிறுவப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் திட்டப்பணிகள்

துறைமுகத்தின் செயல்பாடு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது, அவை:-

ரூபாய் 7056 கோடி செலவில் வெளிதுறைமுக திட்டமானது 1000 மீட்டர் நீளம் மற்றும் 16 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கும் பணி

ரூபாய் 253.57 கோடி செலவில் வடக்கு சரக்குதளம் - 3ஐ 14.20 மீட்டர் ஆழப்படுத்துதல் மற்றும் துறைமுகத்திற்குள் கப்பல் சுற்றுவட்ட பாதையினை ஆழப்படுத்தும் பணி

ரூபாய் 3.26 கோடி செலவில் வடக்கு சரக்குதளம் - ஐஐ-சரக்கு தளத்தினை மேம்படுத்துதல் மற்றும் ரூபாய் 3.69 கோடி செலவில் வடக்கு சரக்குதளம் - ஐஐஐ- சரக்கு தளத்தினை மேம்படுத்தும் பணி

ரூபாய் 16.39 கோடி செலவில் கப்பல் வரும் நுழைவு வாயிலினை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி

ரூபாய் 5.33 கோடி செலவில் பழைய துறைமுகத்தில் கான்கிரேட் சாலைகள் அமைக்கும் பணி

ரூபாய் 7.50 கோடி செலவில் இரயில் மார்க்கமாக சரக்குகளை எடுத்து செல்லும் தளத்தினை மேம்படுத்தும் பணி

ரூபாய் 7.14 கோடி செலவில் மஞ்சள் நுழைவு வாயிலிருந்து வடக்கு சரக்கு தளம் வரை அணுகுசாலையினை அகலப்படுத்தும் பணி

ரூபாய் 9.33 கோடி செலவில் எண்ணெய் தளத்தில் சிறிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக கூடுதலாக dobhins அமைக்கும் பணி

ரூபாய் 4.90 கோடி செலவில் 1 மெகாவாட் தரைதள சூரியமின்னாலை நிறுவும் பணி

ரூபாய் 3.87 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் செயல்முறை ஆலை- உற்பத்தி, சேமிப்பு, மற்றும் மின் உற்பத்தி நிறுவும் பணி

ரூபாய் 2.55 கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புதல் வசதியினை பெறுவதற்கான ஆலோசனை சேவைகளை நியமித்துள்ளது.

எதிர்கால திட்டப்பணிகள்:-

துறைமுகத்தில் பல்வேறு எதிர்கால திட்டங்களை முன்மொழிந்துள்ளது, அவை:

ரூபாய் 66.66 கோடி திட்ட மதிப்பிட்டில் கரித்தளம் - 2ஐ நவீனமயமாக்கும் பணி

ரூபாய் 700 கோடி திட்ட மதிப்பிட்டில் கடற்பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை கையாளும் முனையம் அமைக்கும் பணி.

ரூபாய் 89.52 கோடி திட்ட மதிப்பிட்டில் மொத்த சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக சரக்குதளம்-10 கட்டுமானப் பணி

6 மெகாவாட் காற்றாலை அமைக்கும் பணி

ரூபாய் 66.75 கோடி திட்ட மதிப்பிட்டில் ஏற்கனவே உள்ள 22 கிலோவாட் மின்சார இணைப்பினை 110 கிலோவாட்டாக மேம்படுத்தும் பணி

1 மெகாவாட் மின்சார ஆற்றல் சேமிப்பு வசதி

தானாகவே இயங்க கூடிய 3 எடைமேடை நிறுவும் பணி

பெருநிறுவன சமூக பொறுப்பு கூட்டமைப்பு செயல்பாடுகள்:

பெருநிறுவன சமூக பொறுப்பு கூட்டமைப்புக்கீழ் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு சமூகநலப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024-25 நிதியாண்டு இத்திட்டத்தின்கீழ் போதை பழக்கம் மறுவாழ்வு மையம் கட்டுமான பணி, முத்தையாபுரத்திலுள்ள துறைமுக பாலத்தில் விழிப்புணர்வு ஒவியங்கள் வரைதல், இயற்க்கை எரிவாயினால் இயங்க கூடிய பேருந்து துறைமுக பள்ளிகளுக்கு வழங்குதல், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல், முத்து நகர் கடற்கரையில் 6 தள நீச்சல் குளம் அமைத்தல், மீன் சந்தை அமைத்தல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கழிப்பறை, குளியலறை அமைத்தல் மற்றும் உயர்மின்கம்ப விளக்குகள் அமைத்தல் போன்ற சமூகநல பணிகளுக்காக ரூபாய் 481.75 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

"வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டு சிறப்பாக செயல்பட்டு இச்சாதனை புரிந்துள்ளது, மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கையாளும் திறனை அதிகரிப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, அதன் காரணியாக ஒரு மாதத்திற்குள் ஆழப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டு வரும் நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோகித் கூறினார்.

மேலும் இச்சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்குபெட்டக முனையங்கள் இயக்குபவர்கள், துறைமுக உபயேகிப்பாளர்கள், வளர்ச்சி பங்குதாரர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory