» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல் : ஒருவர் கைது!
சனி 29, மார்ச் 2025 8:15:42 PM (IST)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 37 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. .
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் போலீசார் இன்று (29.03.2025) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் தெற்கு தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாடதங்கம் மகன் ராஜவேல் (54) என்பதும் தனது வீட்டில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் ராஜவேலை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.25,000 மதிப்புள்ள 37கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 29 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
