» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறையில் 62பேருக்கு பொது மாறுதலுக்கான ஆணை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்!
சனி 29, மார்ச் 2025 8:09:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 62பேருக்கு பொது மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள 62 காவல்துறையினருக்கு இன்று பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்படி காவல்துறையினருக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மற்றும் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்கள் உட்பட அமைச்சு பணி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
