» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூஸ் பர்னாந்து நினைவிடத்தில் அஞ்சலி!

சனி 29, மார்ச் 2025 5:15:14 PM (IST)



தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பாண்டியபதி தேர்மாறன் மீட்பு குழு மற்றும் பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகரத் தந்தை, குடிநீர் தந்த கோமான் முன்னாள் நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 95 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாண்டியபதி தேர்மாறன் மீட்பு குழு, அனைத்து ஊர் பரத நலக் கமிட்டியினர், முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம், குரூஸ்பர்னாந்திஸ் மக்கள் மன்றம், சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் பாண்டியாபதி தேர்மாறன் மீட்பு குழு சார்பில் அந்தோணிசாமி, இன்னாசி, ஜான் பெர்னாண்டோ, ஜான்சன், ரவி, சைமன்ஸ், பாரத், ஜெகன், பிரேம், ஆரோக்கியசாமி, அனைத்து ஊர் பரத நலக் கமிட்டி, முத்துக் குளித்துறை பரத நலச்சங்கம் சார்பில் கனகராஜ், ஜான்சன், பியோ, ராஜ், ராஜா, குரூஸ் பர்னாந்திஸ் மக்கள் மன்றம் சார்பில் இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், முன்னாள் பொறுப்பு மேயர் சேவியர் உட்படப லர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory