» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் : அமைச்சர் கீதாஜீவன் உறுதி
சனி 29, மார்ச் 2025 3:28:05 PM (IST)

தூத்துக்குடியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கணினி பட்டா விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடியில் முதற்கட்டமாக நடைபெற்ற மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சியில் 3,624 பேர் மனு அளித்திருந்தனர். அதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவாய்துறையினர் சரி பார்த்து பட்டா வழங்கப்படுகிறது.
இதற்கு ஆட்சியர், ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுக்கள் முழுமையாக இந்த பணியை செய்து வருகின்றனர். இரண்டு கட்டமாக கணினி பட்டா இதுவரை 282 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் முறையாக முறைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு வழங்கப்படும். இதற்கான முழு பங்களிப்பு கலெக்டரும் ஈடுபட்டு பணியாற்றுகிறார். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி பொறியாளர் சரவணன், மாநக திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமி நாதன், கவிதா தேவி, துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
