» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு செல்ல பேருந்து வசதி: மாநில துணைத் தலைவர் முஜிபுர் கோரிக்கை!

சனி 29, மார்ச் 2025 3:08:14 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு செல்ல பேருந்து வசதி வேண்டும் என தமிழக மாநில முதுகலை ஆசிரியர்கள் சங்கத் துணைத் தலைவர் முஜிபுர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மேல்நிலைக் கல்விக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. 

இப் பள்ளியில் நடைபெறக்கூடிய  விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களை திருச்செந்தூரில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் வந்து செல்லும் பேருந்துகள் காலை வேளையில் ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில் இறக்கி விடவும், அதே போல மாலை வேளையில் ஆசிரியர்களை  ஏற்றிச் செல்லவும் ஏற்பாடு செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட முதுநிலை ஆசிரியர்கள் சார்பில் திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் தமிழக மாநில முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க துணைத் தலைவர் முஜிபுர் கோரிக்கை மனு அளித்தார். 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்துள்ளதாக மாநில துணைத் தலைவர் முஜிபுர்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education



Thoothukudi Business Directory