» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 10 வழித்தடங்களுக்கு மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 28, மார்ச் 2025 10:10:36 AM (IST)
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களின் எல்கைக்குட்பட்ட 10 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 28.03.2025-க்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு முதல் வடக்கு சுனாமி காலனி, வடக்கு சுனாமி காலனி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு, மீளவிட்டான் இரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முதல் மீளவிட்டான் இரயில் நிலையம், வீரநாயக்கன் தட்டு முதல் பழைய பேருந்து நிலையம் ஆகிய 05 வழித்தடங்களுக்கும்,
திருச்செந்தூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான திருச்செந்தூர் பேருந்து நிலையம் முதல் குலசேகரப்பட்டினம் (முஸ்லீம் தெரு), பேய்க்குளம் (காமராஜர் சிலை) முதல் திசையன்விளை- இட்டமொழி பிரிவு, உடன்குடி (வி.ஏ.ஓ.ஆபிஸ்) முதல் திசையன்விளை (ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில்), உடன்குடி (பேரூராட்சி அலுவலகம்) முதல் ஆனந்தபுரம் ஐடிஐ, ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் முதல் அரசன்குளம் விலக்கு ஆகிய 05 வழித்தடங்களுக்கும் ஆக மொத்தம் 10 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட வழித்தடங்களுக்கு பின்வரும் படிவம் மற்றும் ஆவணங்களை இணைத்து (SCPA Form with fees of Rs. 1500+100+600/-, Address evidence, Road worthy certificate from A.E/D.E. Highways, Tentative timings, Route –Map/Sketch, Solvency Certificate) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
