» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வியாழன் 27, மார்ச் 2025 8:11:56 AM (IST)
கோவில்பட்டியில் பணியில் இருந்த பெண் காவலரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெரு சந்திப்பில், போக்குவரத்து பிரிவு பெண் காவலர் இந்திராகாந்தி நேற்று பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மாணிக்கராஜா என்பவர் செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டி சென்றாராம்.
இதைக் கண்ட பெண் காவலர் இந்திரா காந்தி அவரை நிறுத்தி, செல்போனில் கொண்டு பைக்கை ஓட்டாதீர்கள் என அறிவுறுத்தினாராம். அப்போது மாணிக்கராஜா, அவரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாணிக்கராஜாவை (45) கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
