» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு

புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)



விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையை 5' அடி ஆக்கிரமித்திருப்பதாகவும், இதனால் அங்குள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பட்டா உட்பிரிவை கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் இப்பாதையானது பட்டா நிலத்தில் வருவதால் என்னால் சட்டத்திற்குட்பட்டு எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இப்பிரச்சினை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தவறு இருக்கும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். மேலும், இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தராதபட்டசத்தில், சிதம்பரநகரில் யார் செத்தாலும் தாலுகா ஆபிஸ்ல-தான் புதைப்போம் என ஆக்ரோஷமாக தெரிவித்துச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory