» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் புனித ரமலானை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்ட செயலாளர் முகமது யூஸ் ஆஃப் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புனித ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் அலிம் மற்றும் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். ரொட்டேரியன் கண்ணன், உதவி ஆளுநர் மற்றும் சங்கத்தின் செயலாளர் விக்டர், கௌரவ விருந்தினர் இமாம் அலிம் இப்தார் நற்செய்திகளையும் நோன்பின் கடை பிடிப்புகளையும் மிகச் சிறப்பாக விவரித்தார்.
செயலாளர் ரகுமான் ரம்ஜான் நோன்பு மாதம் கடைபிடிக்கும் 5 நற்பண்புகளை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் முகமது யூசுப் ராஜா பேசுகையில் இதுபோன்று மத வேறுபாடு இன்றி அனைவரும் இணைந்து பங்கேற்று இப்தார் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது இதுபோன்ற ஒற்றுமை நமக்குள் இருப்பினும் யாரேனும் நம்மை பிரிக்க இயலாது என்று உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிட்டரின் இப்ராகிம், பைசர் ரகுமான் ரொட்டேரியன், ஆசிக் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
