» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி : எஸ்பி துவக்கி வைத்தார்!

செவ்வாய் 25, மார்ச் 2025 8:11:01 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரகுருபரர் சுவாமி கலை கல்லூரியில் வைத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தலைமையில்  நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்  ஆறுமுகம்,  தீபு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர்  பென்னடிக் ஆசீர், வருவாய் கோட்ட அலுவலர்  பிரபு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜமால், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  ராமகிருஷ்ணன் மற்றும்  காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் மற்றும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலை கல்லூரி முதல்வர்  விஜயகுமார் உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory