» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொடூர விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் : ஆட்சியரிடம் பெண் கோரிக்கை!
திங்கள் 24, மார்ச் 2025 12:00:33 PM (IST)

தூத்துக்குடியில் கணவர் விபத்தில் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சங்கரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனது கணவர் அந்தோணி (34) சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து எனது கணவரும் கணவரோடு பணிபுரியும் பிரபு என்பவரும் இரு சக்கர வாகனத்தில் 3 மைல் ஓடைப்பாலம் வழியாக 11 மணி அளவில் அண்ணா நகர் 12ல் உள்ள பெனிஷா அரிசி கடை அருகில் வந்து கொண்டு இருக்கும்போது அதிவேகமாகவும் அஜாக்கரதையாகவும் கட்டுப்பாடு இல்லாமலும் முன் விளக்கு மற்றும் ஒலி எழுப்பாமலும் வந்த கார் மோதியது. மோதிய பிறகும் குறைந்த பட்ச மனிதாபி மணம் கூட இல்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அதன்பின் எனது கணவரையும் அவருடன் வந்த பிரபு என்பவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் எனது கணவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 20ம் தேதி இறந்தார். இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விபத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும். எனது குழந்தைகள் மற்றும் எனது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும். இல்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










