» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 56.40மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் சாத்தான்குளம் 29.20 மிமீ மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்லையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர். இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மழை அளவு மில்லி மீட்டரில்
தூத்துக்குடி 10.20
ஸ்ரீவைகுண்டம் 3.00
காயல்பட்டினம் 2.00
குலசேகரப்பட்டினம் 8.00
சாத்தான்குளம் 29.20
கோவில்பட்டி 4.00
மேலும், கழுகுமலை, கயத்தார், கடம்பூர், எட்டயபுரம், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பார், சூரங்குடி, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேதநாதம், கீழஅரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 56.40 மிமீ மழை பெய்துள்ளது. சராசரி அளவு 2.97 மிமீ ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










