» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

தூத்துக்குடியில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியர் எழுத்தாளர் நெய்தல் யூ. அண்டோவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவுக்கு அவர் பணி செய்கிற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. சவேரியானா இல்ல அதிபர் ஆரோக்கியசாமி, பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர் அமல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடினார். வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் எ.பி.சி.வி. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், நெய்தல் அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி என்ற முப்பெரும் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்ணின் வரலாற்றைத் துணிவுடன் பதிவு செய்யும் எழுத்துப் பணியைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.
விழாவில் உதவித் தலைமையாசிரியர்கள் வளன், ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆசிரியரைப் பாராட்டினர். முன்னதாக, ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்றார். நிறைவாக ஆங்கில வழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் டைசன் நன்றியுரை கூறினார். நிகழ்வை ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் யூ. அண்டோ ஏற்புரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
