» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!

சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)

தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தீ விபத்தின்போது பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வந்தன. இதன்மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி இரவு அனல்மின்நிலையத்தில் 1, 2-வது மின்சார உற்பத்தி எந்திரத்தின் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மின்சார ஒயரில் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் தென்மண்டல அளவிலான தீயணைப்பு படையினர் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 18 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 எந்திரங்களும் பெரிதும் சேதம் அடைந்தன. 3-வது மின்உற்பத்தி எந்திரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 3 மின்உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்வதற்கும், சேத மதிப்பு கணக்கிடுவதற்கும் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கலில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தலைமை பொறியாளர் கனிகண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் நேற்று காலை தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது தீப்பற்றி எரிந்த மின்உற்பத்தி எந்திரங்களை பார்வையிட்டனர்.

பின்னர் தீ விபத்தின் போது, பணியில் இருந்த பொறியாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோன்று தீயணைப்பு படையினரிடமும் முழுமையாக விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு அனல் மின்நிலைய தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். முழுமையாக ஆய்வுக்கு பிறகு சேத மதிப்பு உள்ளிட்டவை குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory