» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனமழை: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!
சனி 22, மார்ச் 2025 8:17:25 AM (IST)

தூத்துக்குடியில் அதிகாலை 2 மணி முதல் கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக நல்ல வெயில் அடித்து வந்தது இதனால் பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி முதல் தூத்துக்குடி இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் பிரைன் நகர் முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம், புதுக்கோட்டை , முத்தையாபுரம், தாளமுத்து நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் தற்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)








